துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நீரு தண்டா!

கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வரும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், மகளிர் டிராப் பிரிவு இறுதியில் இந்தியாவின் நீரு தண்டா 43 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் கைப்பற்றினார். கத்தாரின் பாசில் ரே 37 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், இந்தியாவின் ஆஷிமா அஹ்லாவத் 29 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

அதே பிரிவின் அணிகள் போட்டியில் நீரு தண்டா, ஆஷிமா அஹ்லாவத், பிரீத்தி ரஜக் ஆகியோர் இணைந்த இந்திய அணி 319 புள்ளிகள் சேர்த்து தங்கப் பதக்கத்தை வென்றது. ஆண்கள் டிராப் இறுதியில் இந்தியாவின் பவுனீஷ் மெந்திராட்டா 45 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றார். மேலும், மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் மனு பாகர், இஷா, சிம்ரன்பிரீத் கவுர் ஆகியோர் 1,749 புள்ளிகள் சேர்த்து வெண்கலம் பெற்றனர்.

மகளிர் ஜூனியர் 25 மீட்டர் பிஸ்டல் இறுதியில், இந்தியாவின் பாயல் காத்ரி 36 புள்ளிகளுடன் தங்கம், நம்யா கபூர் 30 புள்ளிகளுடன் வெள்ளி, தேஜஸ்வினி 27 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றனர். இதே பிரிவின் அணிகள் போட்டியில் மூவரும் சேர்ந்து 1,700 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றனர்.

Facebook Comments Box