ரஷ்யாவிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெயிலிருந்து இந்தியா லாபம் ஈட்டுவதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் விமர்சித்துள்ளார்.
சமீபத்திய பேட்டியில், “மாஸ்கோவிலிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி அதை சுத்திகரித்து மறுவிற்பனை செய்யும் இந்தியாவின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதன் மூலம் இந்தியா லாபம் ஈட்டுகிறது” என பெசென்ட் தெரிவித்தார்.
இந்த விமர்சனம் முதல்முறை அல்ல; கடந்த வாரம் அளித்த பேட்டியில் அவர், “அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் வ்லாடிமிர் புதினுடன் டொனால்ட் ட்ரம்ப் நடத்தும் பேச்சுவார்த்தைகள் பலனளிக்காவிட்டால், இந்தியாவுக்கு மேலுமொரு வரி விதிக்கப்படும்” என எச்சரித்தார்.
கடந்த 10 நாட்களில், ரஷ்யா எரிசக்தி வர்த்தகத்தில் இந்தியாவை குறிவைத்து பெசென்ட் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, இந்தியா போன்ற ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி பொருட்களுக்கு 50 சதவீத வரியை ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும் அபராதம் விதிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.