ஜம்மு-காஷ்மீர்: குரேஸ் செக்டாரில் மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் பந்திபூர் மாவட்டம் குரேஸ் செக்டாரில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை, ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்த நடவடிக்கையில் சுட்டுக் கொன்றனர்.

உளவுத்துறை தகவலின் பேரில் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படையினர், சந்தேகத்திற்கிடமான அசைவுகளை கவனித்து திடீர் தாக்குதல் நடத்தினர். அதற்கு எதிராக பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்த, பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடியில் 2 தீவிரவாதிகள் சுட்டு வீழ்ந்தனர். சம்பவத்துக்குப் பிறகு அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

சினார் கார்ப்ஸ் ‘எக்ஸ்’ பதிவில், “ஜே.கே.பி. வழங்கிய உளவுத்துறை தகவலின் அடிப்படையில் ராணுவம் மற்றும் காவல்துறை சேர்ந்து நடவடிக்கை எடுத்தன. அதில் 2 ஊடுருவிகள் கொல்லப்பட்டனர். தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி உரி செக்டாரில் நடந்த ஊடுருவல் முயற்சியை முறியடிக்கும் போது, ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் நினைவுகூரத்தக்கது.

Facebook Comments Box