பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2’ வெளியீட்டு தேதி மாற்றம் – ரசிகர்களுக்கு ஏமாற்றம்
பாலகிருஷ்ணா நடித்துவரும் ‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி பின்னோக்கி மாற்றப்பட்டுள்ளது.
போயப்பட்டி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த ‘அகண்டா’ படம் வெளியாகி, அதின் பஞ்சு வசனங்கள், அதிரடி காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் படம் வசூலில் சாதனையை படைத்தது. இதன் தொடர்ச்சியாக ‘அகண்டா 2’ உருவாகி வருகிறது.
முதலில் இந்த படம் செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நீண்டதால், திட்டமிட்ட தேதியில் வெளியிட இயலாது என்று கூறப்பட்டுள்ளது. மிக விரைவில் புதிய வெளியீட்டு தேதியை அறிவிப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
‘அகண்டா 2’ சாதாரணமான திரைப்படமல்ல; அது சினிமா விழாவாக இருக்கும் என படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. செப்டம்பர் 25 வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பாலகிருஷ்ணா ரசிகர்கள், சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.