நாடு முழுவதும் ஆசிரியர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்தது

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வித் தகவல் அமைப்பு வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்த கல்வியாண்டில் நாடு முழுவதும் பணிபுரியும் ஆசிரியர்களின் எண்ணிக்கை முதல் முறையாக ஒரு கோடியை கடந்துள்ளது. இதனுடன், 2024–25 கல்வியாண்டில் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 24.68 கோடி பேராக உள்ளனர்.

ஆனால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மாணவர் எண்ணிக்கை சுமார் 11 லட்சம் குறைந்துள்ளது. குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்திருப்பதுதான் பள்ளி சேர்க்கை குறைவுக்குக் காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022–23 கல்வியாண்டில் 25.18 கோடி மாணவர்கள் இருந்த நிலையில், 2023–24-இல் அது 24.68 கோடியாக குறைந்துள்ளது.

Facebook Comments Box