‘லோகா’ படத்திற்கு வரவேற்பு: குழுவினர் சந்தோஷம்

மலையாளத்தில் ‘லோகா’ படத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்திருப்பதால், படக்குழுவினர் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர்.

துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளிவந்துள்ளது ‘லோகா சாப்டர் 1: சந்திரா’. ஓணம் திருநாளை முன்னிட்டு மோகன்லால் நடித்த ‘ஹ்ருதயபூர்வம்’, ஃபகத் பாசில் நடித்த ‘ஓடும் குதிர சாடும் குதிர’ ஆகிய படங்களும் வெளியாகின. ஆனால் அவற்றை விட ‘லோகா’க்கு அதிகமான மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.

முதல் நாளில் 250 திரையரங்குகளில் வெளியான ‘லோகா’, அடுத்த நாளிலிருந்து 325 திரையரங்குகளாக உயர்த்தப்பட்டது. இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். அடுத்த நாட்களில் திரையரங்குகளும் காட்சிகளும் மேலும் அதிகரிக்கும் என அவர்கள் நம்புகின்றனர். இந்த வெற்றியின் அடிப்படையில், பிற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

‘லோகா’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஏஜிஎஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இன்று முதல் தமிழிலும் தமிழகத்தில் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் முதல் பெண் சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. டொமினிக் அருண் எழுதி இயக்கிய இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ளார்.

‘பிரேமலு’ நஸ்லன், சந்து சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்க, ஜேக்ஸ் பீஜாய் இசையமைத்துள்ளார்.

Facebook Comments Box