சீன சமூக வலைத்தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றவர் பிரதமர் நரேந்திர மோடி.

சீனாவில் ட்விட்டர், பேஸ்புக் போன்ற மேற்கத்திய சமூக வலைத்தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ள சூழலில், அந்நாட்டு மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளம் ‘வெய்போ’ ஆகும்.

சமீபத்தில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், வெய்போவில் பிரதமர் நரேந்திர மோடியை சார்ந்த பதிவுகள் முதலிடத்தைப் பிடித்துள்ளன.

இதுகுறித்து சீன அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது:

“சீனாவில் கூகுள் செயல்பாட்டில் இல்லை; அதற்குப் பதிலாக உள்ளூர் தேடுபொறியான பைடு பயன்படுத்தப்படுகிறது. அங்கு பிரதமர் மோடி குறித்து அதிகமான தேடல்கள் இடம்பெற்றுள்ளன. வெய்போவில் மோடி தொடர்பான படங்கள், வீடியோக்கள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக மோடி, புதின், ஜி ஜின்பிங் ஒரே நேரத்தில் கலந்துரையாடும் காட்சிகள், ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரே வாகனத்தில் பயணிக்கும் வீடியோக்கள் வைரலாக பரவுகின்றன. பிரதமர் மோடியின் துணிச்சலான நடவடிக்கைகள், அணுகுமுறை, உடைமை குறித்து சீனர்கள் பாராட்டி வருகின்றனர்.” என்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் எஸ்சிஓ உச்சிமாநாடு நடைபெறுகிறது. ஆனால், 7 ஆண்டுகள் கழித்து பிரதமர் மோடி சீனாவுக்கு பயணம் செய்திருப்பதால், இந்த முறை நடைபெற்ற மாநாடு உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய ஊடகங்களும் மோடியைச் சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிட்டுள்ளன என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Facebook Comments Box