அமெரிக்க வரி தாக்கம்: ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசின் நிவாரணம்

அமெரிக்கா, இந்தியப் பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி விதித்ததால், இந்தியாவின் ஏற்றுமதி துறைக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. ஜவுளி, தயாரிப்பு ஆடைகள், தங்க நகைகள், ரத்தினக் கற்கள், வெள்ளிப் பொருட்கள், தோல் உற்பத்திகள், காலணிகள், ரசாயனங்கள், பொறியியல் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான வெளிநாட்டு ஆர்டர்கள் குறைந்து, ஏற்றுமதியாளர்கள் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையை சமாளிக்க மத்திய அரசு நிவாரணத் திட்டத்தை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளது. அதில், சிறு ஏற்றுமதியாளர்களின் பணப்புழக்க சிக்கல்களை குறைப்பது, செயல்பாட்டு மூலதனத்தின் அழுத்தத்தைத் தளர்த்துவது, ஏற்றுமதி சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்புகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும். மேலும், புதிய சந்தைகளை உருவாக்கி, உற்பத்தி இடையூறு இல்லாமல் நடைபெறுவதை உறுதி செய்வதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.

Facebook Comments Box