கனடாவில் இருந்து 2 காலிஸ்தான் தீவிரவாதக் குழுக்களுக்கு நிதி உதவி – உளவு அமைப்பு அறிக்கை
“2025 – கனடாவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் தீவிரவாதக் குழுக்களுக்கு நிதி ஓட்டம்” என்ற தலைப்பில் வெளியான சமீபத்திய ஆய்வு அறிக்கை பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
அதில், கனடாவில் செயல்பட்டு வரும் பப்பர் கல்சா இன்டர்நேஷனல் மற்றும் சர்வதேச சீக்கிய இளைஞர் ஒருங்கிணைப்பு எனும் 2 காலிஸ்தான் தீவிரவாதக் குழுக்களுக்கு கனடாவிலிருந்தே நிதியுதவி சென்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை கனடாவின் ஒட்டாவா உளவு அமைப்பு அதிகாரப்பூர்வமாக அரசிடம் அனுப்பியுள்ளது. மேலும், கனடாவில் ஹமாஸ் உட்பட பப்பர் கல்சா இன்டர்நேஷனல், சர்வதேச சீக்கிய இளைஞர் ஒருங்கிணைப்பு போன்ற தீவிரவாத அமைப்புகள் வெளிநாட்டிலிருந்து நிதி பெற்று வருகின்றன என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Facebook Comments Box