ஆசிய கோப்பை ஹாக்கி – இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேற்றம்!

பிஹார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெற்று வரும் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில், இந்திய அணி அசத்தலான வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

சூப்பர்-4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா, சீனாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7-0 என்ற கணக்கில் ஒரேபக்கமாக வெற்றி பெற்றது. அபிஷேக் 2 கோல்கள் அடித்து பிரகாசிக்க, சுக்ஜீத் சிங், ராஜ்குமார் பால், மன்தீப் சிங், தில்பிரீத் சிங் மற்றும் லக்ரா ஷில்லானந்த் தலா ஒரு கோல் சேர்த்தனர்.

இந்த வெற்றியால் இந்தியா, சூப்பர்-4 சுற்றில் 7 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதேசமயம், 4 புள்ளிகள் பெற்ற கொரியா 2வது இடத்தில் இருந்து இந்தியாவுக்கு எதிரியாக இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது.

இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா–கொரியா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இடம்பிடிக்கும்.

Facebook Comments Box