ரஜினி – கமல் இணைவு உறுதி: லோகேஷ் கனகராஜ் இயக்கம்!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கான மிகப்பெரிய செய்தி – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படம் உறுதியாகியுள்ளது. இதை கமல்ஹாசனே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார்.

இப்படத்தை இயக்குவது லோகேஷ் கனகராஜ். அவர் முன்பு “கைதி 2” படத்தை அடுத்ததாக இயக்குவதாக கூறியிருந்தாலும், அதற்கு முன்னதாகவே ரஜினி–கமல் இணையும் இந்த கனவு திட்டத்தில் பணியாற்ற முடிவு செய்துள்ளார். இந்த மாபெரும் திட்டத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கின்றன.

சைமா விருது விழாவில் பேசிய கமல்ஹாசன்,

“நாங்கள் இருவரும் நீண்ட நாட்களாக இணைந்து பணியாற்றவில்லை. எங்களுக்கு இடையிலான போட்டி என்றே இல்லை; அது ரசிகர்கள் உருவாக்கிய ஒன்று. இந்த இணைவு எப்போதோ நடக்க வேண்டியது, இப்போது நடக்கிறது என்பதில் மகிழ்ச்சி. நாங்கள் ஒருவருக்கொருவர் படங்களை தயாரிக்க வேண்டும் என விரும்பியிருந்தோம். ஆனால் பல காரணங்களால் அது தாமதமானது. இப்போது அந்த வாய்ப்பு வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினி – கமல் – லோகேஷ் கனகராஜ் இணையும் இந்த மெகா படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். படப்பிடிப்பு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்து, ஆண்டு இறுதிக்குள் திரையரங்குகளை அடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

Facebook Comments Box