8 ஆண்டுகள் கழித்து இந்தியா ஆசியக் கோப்பை ஹாக்கியில் சாம்பியன்!

ஆடவர் பிரிவு ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி, கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

பீஹார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெற்ற இந்த தொடரின் சூப்பர்–4 சுற்றின் கடைசி ஆட்டத்தில், இந்தியா சீனாவை எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் இந்தியா 7-0 என்ற கணக்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அபிஷேக் 2 கோல்கள் அடிக்க, சுக்ஜீத் சிங், ராஜ்குமார் பால், மன்தீப் சிங், தில்பிரீத் சிங் மற்றும் லக்ரா ஷில்லானந்த் தலா ஒரு கோல் சேர்த்தனர்.

இந்த வெற்றியால் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதியில் கொரியாவை எதிர்கொண்ட இந்தியா, போட்டி தொடங்கிய சில நொடிகளில் முதல் கோலை பதிவு செய்து ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2017க்குப் பிறகு மீண்டும் ஆசியக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

கொரிய அணி கடுமையான அழுத்தம் கொடுத்தாலும், இந்திய வீரர்கள் நிதானமாக விளையாடி வெற்றியை உறுதி செய்தனர். இந்த வெற்றியால் இந்தியா அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான தகுதியையும் பெற்றுள்ளது.

Facebook Comments Box