‘புஷ்பா 3’ நிச்சயம் வர இருக்கிறது! – சுகுமார் உறுதி
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் 2021-ல் வெளியானது. தெலுங்கில் மட்டுமல்லாது பல மொழிகளில் வெற்றிபெற்றதால், அதற்கான தொடர்ச்சிப் படம் ‘புஷ்பா 2’ 2024-ல் திரையரங்குகளை வந்தடைந்தது.
புஷ்பா 2-இல் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் ஃபாசில், ஜெகபதி பாபு, சுனில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் சூப்பர்ஹிட் ஆகி, இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்தது.
இந்நிலையில், புஷ்பா 3 உருவாகாது என சில செய்திகள் வெளியானது. காரணம், அல்லு அர்ஜுன் மற்ற படங்களில் பிஸியாக இருப்பதே.
ஆனால் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற விருது விழாவில் இயக்குநர் சுகுமார், “புஷ்பா 3 கண்டிப்பாக உருவாகும்” எனத் தெளிவுபடுத்தினார். தற்போது அல்லு அர்ஜுன், அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் சுகுமார், ராம் சரண் நடித்துக் கொண்டிருக்கும் படத்தை இயக்குகிறார்.
இருவரும் தங்களது திட்டங்களை முடித்தவுடன், புஷ்பா 3-ன் பணிகள் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.