ஜிஎஸ்டி 2.0 – வீடுகள், சொகுசு கார் விலை குறையவுள்ளது!

முன்பு அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியில் சிமென்ட் மீது 28% வரி விதிக்கப்பட்டு வந்தது. தற்போது திருத்தப்பட்ட புதிய விகிதத்தில் சிமென்டுக்கு விதிக்கப்படும் வரி 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, மரச்சாமான்கள், மார்பிள், கிரானைட் மற்றும் பிற கட்டுமானப் பொருட்களுக்கு முன்பு 12% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. புதிய வரி விகிதத்தில் இவை அனைத்தும் 5% வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் விளைவாக வீட்டு கட்டுமான செலவு குறைந்து, வீட்டு விலைகளும் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொகுசு கார் விலை – குறைய வாய்ப்பு

புதிய மாற்றங்களின்படி சொகுசு கார்கள் மீது 40% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விலை உயரும் என ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால் ஆட்டோமொபைல் துறை நிபுணர்கள் இதை மறுத்துள்ளனர்.

அவர்கள் விளக்குவதாவது:

  • பழைய ஜிஎஸ்டி கட்டமைப்பில் மெர்சிடஸ் போன்ற சொகுசு கார்கள் மீது 28% ஜிஎஸ்டி + 22% செஸ் வரி சேர்த்து மொத்தம் 50% வரி விதிக்கப்பட்டது.
  • உதாரணமாக, ஒரு கார் விலை ரூ.1 கோடி என்றால், ரூ.50 லட்சம் வரி கட்ட வேண்டியது.
  • தற்போது ஜிஎஸ்டி 40% என்றாலும், செஸ் வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
  • இதனால் அதே ரூ.1 கோடி மதிப்புள்ள காருக்கு ரூ.40 லட்சம் மட்டுமே வரி செலுத்தினால் போதும்.

அதாவது, புதிய வரி அமைப்பில் சொகுசு கார் விலை குறையும் என்று நிபுணர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

Facebook Comments Box