உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்தியாவின் நுபுர் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கம் உறுதி

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், 80 கிலோக்கு மேற்பட்ட எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நுபுர் ஷியோரன் அரையிறுதிக்கு தகுதி பெற்று, இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

26 வயதான நுபுர், காலிறுதி ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை ஓல்டினாய் சோடிம்போவை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். 80+ கிலோ எடைப்பிரிவு ஒலிம்பிக்கில் இல்லாத காரணத்தால், நுபுர் நேரடியாக காலிறுதியில் களம் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டம் தொடங்கிய முதல்நிமிடங்களிலிருந்தே நுபுரின் ‘பஞ்ச்’-கள் தெளிவாக தாக்கம் செய்தன. இருவருக்கும் தலா ஒரு புள்ளி பெனால்டியாக குறைக்கப்பட்டது. இருந்தாலும், 4-1 என்ற கணக்கில் நுபுர் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தார். அரையிறுதியில் துருக்கியின் சேமா டஸ்டாஸை அவர் சந்திக்கிறார்.

இதே போட்டித் தொடரில், இரண்டு முறை உலக சாம்பியனாக விளங்கிய நிகாத் ஜரீன், துருக்கியின் காகிரோக்லு பஸ் நாஸை இன்று பின்னிரவு எதிர்கொள்ள உள்ளார். மேலும், இந்திய வீரர்கள் பூஹா ராணி மற்றும் அபினேஷ் ஜம்வால் ஆகியோரும் தங்களது காலிறுதி ஆட்டங்களில் பங்கேற்கிறார்கள்.

Facebook Comments Box