மறுவெளியீடாகும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’

விஷால் வெங்கட் இயக்கத்தில், அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், அபிஹாசன், அஞ்சு குரியன் உள்ளிட்டோர் நடித்த திரைப்படமே ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’.

ஏ.ஆர். என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்த இந்த படம், 2022 ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியானபோது பாராட்டுகளைக் குவித்தது. ரதன் இசையமைத்திருந்த இப்படத்திற்கு, மெய்யேந்திரன் கே ஒளிப்பதிவை மேற்கொண்டிருந்தார்.

இந்த படத்தை பிவிஆர் சினிமாஸ் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி மீண்டும் திரையரங்கில் வெளியிட உள்ளது. மறுவெளியீட்டிலும் ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments Box