திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக அனில்குமார் சிங்கால் மீண்டும் பொறுப்பேற்பு
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியாக அனில்குமார் சிங்கால் நேற்று இரண்டாவது முறையாக ஏழுமலையான் கோயிலில் பொறுப்பேற்றார்.
அதிகாலை அவர் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று ஸ்ரீனிவாசப் பெருமாளை தரிசித்தார். அதன் பின், தேவஸ்தான நிர்வாக அதிகாரி பதவியை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் திருமலை அன்னமைய்யா பவனில் தேவஸ்தானத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அதன்போது பேசிய அவர், “இரண்டாவது முறையாக இந்த தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கு மிகப் பெரும் பாக்கியம்” என்று தெரிவித்தார்.
Facebook Comments Box