முனிஷ்காந்த் நாயகனாகும் புதிய படம் – ‘மிடில் கிளாஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

முனிஷ்காந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் படத்துக்கு ‘மிடில் கிளாஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

முனிஷ்காந்த் – விஜயலட்சுமி ஜோடியாக நடித்திருக்கும் இந்த படம், நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. “ஒவ்வொரு ரூபாயையும் கணக்குப் பார்த்து செலவழிக்கும் வாழ்க்கை, சிறிய விஷயங்களில் மகிழ்ச்சி காணும் மனநிலை, வீட்டுக்கடனையும் விட சுமையாக இருக்கும் மாத தவணை” – இவையே இப்படத்தின் கதையின் மையக் கருத்து.

முனிஷ்காந்த் – விஜயலட்சுமியுடன், காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மறைந்த டில்லி பாபுவின் தயாரிப்பில் தொடங்கிய இந்த படத்தை, கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ளார். தேவ் மற்றும் கே.வி. துரை இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு சுதர்ஷன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு, ப்ரணவ் முனிராஜ் இசை, சான் லோகேஷ் எடிட்டிங் ஆகிய பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

Facebook Comments Box