விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை ‘ராட்சசன்’ இயக்குநர் இயக்குவாரா?

விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை ‘ராட்சசன்’ இயக்குநர் ராம்குமார் இயக்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்ரமின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. மடோன் அஸ்வின் மற்றும் பிரேம் குமார் படங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இரண்டு இயக்குநர்களும் வேறொரு நாயகனை வைத்து படங்கள் இயக்க திட்டமிட்டுள்ளனர். இதனால், விக்ரமின் அடுத்த இயக்குநர் யார் என்பது குறித்து குழப்பம் நீடித்து வருகிறது.

சமீபத்தில், ‘ராட்சசன்’ இயக்குநர் ராம்குமார் விக்ரத்தை சந்தித்து கதையொன்று முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ராம்குமார் தற்போது விஷ்ணு விஷால் நடிக்கும் ‘இரண்டு வானம்’ படத்தின் இறுதிக் கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார். அதனை முடித்தவுடன் விக்ரம் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.

விக்ரம் – ‘ராட்சசன்’ ராம்குமார் கூட்டணியின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே, ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமாரும் விக்ரத்திற்கு கதை முன்வைத்ததாகத் தெரிய வருகிறது. தற்போது, இரண்டு ராம்குமார்களில் யார் விக்ரமின் அடுத்த இயக்குநர் ஆகப்போகிறார் என்பது பரிசீலனையில் உள்ளது.

Facebook Comments Box