சென்னை மாவட்ட பி-டிவிஷன் வாலிபால் சாம்பியன்ஷிப் தொடக்கம்
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில், சென்னை மாவட்ட பி-டிவிஷன் ஆடவர் வாலிபால் சாம்பியன்ஷிப் மற்றும் மாவட்ட மகளிர் சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று தொடங்கின. ஆடவர் பிரிவில் 25 அணிகளும், மகளிர் பிரிவில் 12 அணிகளும் பங்கேற்றுள்ளன.
தொடக்க விழாவில் வருமான வரி தலைமை ஆணையர் சுதாகர ராவ், விக்ரம் ரதி, ஆர்வி.எம்.ஏ. ராஜன், வெற்றிவேல், சுரேஷ் குமார், சென்னை மாவட்ட வாலிபால் சங்க செயல் தலைவர் ஜெகதீசன், பொருளாளர் பழனியப்பன், செயலாளர் கேசவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல் நாளில் ஆடவர் பிரிவில் நடந்த ஆட்டங்களில், எஸ்டிஏ அணி 2-0 என்ற செட் கணக்கில் கிறிஸ்டியன் ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை அணியை வீழ்த்தியது. மேலும், டிபி ஜெயின் கல்லூரி, தமிழக காவல்துறை, எஸ்ஆர்எம் அகாடமி, ஏகே சித்ரபாண்டியன் நினைவு கிளப், ஜிஎஸ்டி அணிகள் வெற்றிபெற்றன.
மகளிர் பிரிவில் நடைபெற்ற போட்டிகளில், தெற்கு ரயில்வே அணி 2-0 என்ற கணக்கில் மினி ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை அணியையும், டாக்டர் சிவந்தி கிளப் 2-0 என்ற கணக்கில் சென்னை பிரண்ட்ஸ் கிளப்பையும் தோற்கடித்தன.