ஆமீர் கான் – லோகேஷ் படம் கைவிடப்பட்டதா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆமீர் கான் நடிக்க இருந்த திரைப்படம் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தில், லோகேஷ் இயக்கத்தில் ஆமீர் கான் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். படம் வசூலில் வெற்றி பெற்றாலும், சமூக வலைதளங்களில் ட்ரோல்களால் விமர்சிக்கப்பட்டது.

அதையடுத்து, ஆமீர் கானை மையமாகக் கொண்டு ஒரு பிரம்மாண்டமான சூப்பர் ஹீரோ கதையை இயக்கப்போவதாக லோகேஷ் அறிவித்தார். இது தனது கனவு திரைப்படம் என்றும், சித்தாரே ஜமீன் பர் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் ஆமீர் கானும் உறுதி செய்தார். “லோகேஷ் இயக்கத்தில் நான் நடிக்கும் படம் மிகப்பெரிய சூப்பர் ஹீரோ கதை. அடுத்தாண்டின் இரண்டாம் பாதியில் படப்பிடிப்பு தொடங்கும்” என அவர் கூறியிருந்தார்.

ஆனால், இப்போது அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின்றன. லோகேஷ், கூலிக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் கைதி 2யை இயக்குவார் எனக் கூறியிருந்தார். எனினும், திடீரென ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால், கைதி 2 தாமதமானது. இதன் நடுவே, ஆமீர் கான் படம் கைவிடப்பட்டதாக வரும் செய்திகள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

இதற்கான காரணம் – தேதிகள் மோதலா அல்லது வேறு காரணமா – என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

Facebook Comments Box