நடப்பு ஆண்டின் முதல் பாதியில் பத்திரிகை விற்பனையில் 2.77% உயர்வு

நாட்டில் பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களின் விற்பனை எண்ணிக்கைகளை கணக்கிட்டு சான்றளிக்கும், லாப நோக்கற்ற நிறுவனம் தான் ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேஷன்ஸ் (ஏபிசி). விளம்பரதாரர்களுக்கும் வாசகர்களுக்கும் நம்பகமான தகவல்களை வழங்கும் வகையில், பத்திரிகை விற்பனையை அவர்கள் இடையறாது கண்காணித்து வருகின்றனர்.

அந்த அமைப்பு நேற்று வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின் படி, இந்தாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை பத்திரிகை விற்பனையில் 2.77 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த 6 மாதங்களில் மொத்தம் 2,97,44,148 பிரதிகள் விற்பனையாகியுள்ளன. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 2.77% அதிகம்.

இதன் மூலம், மக்கள் இன்னும் நம்பகமான மற்றும் விரிவான செய்திகளுக்காக அச்சு ஊடகங்களைத் தொடர்ந்து நம்புகிறார்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. இதனை, அச்சு ஊடகத் துறையின் ஆரோக்கியமான வளர்ச்சி என ஏபிசி குறிப்பிடுகிறது.

Facebook Comments Box