கிலோ ரூ.200-க்கு சென்ற சீரக சம்பா அரிசி விலை!
தமிழகத்தில் பிரியாணிக்குப் பெரிதும் பயன்படுத்தப்படும் சீரக சம்பா அரிசி விலை திடீரென உய்ந்து, கிலோ ரூ.200-ஐ தொட்டுள்ளது.
சம்பா பருவத்தில் மட்டுமே விளையும் இந்த அரிசி ரகம் சுவை, நறுமணம், மருத்துவ குணங்கள் கொண்டதால் பிரபலமானது. குறிப்பாக, திருச்சி துறையூர் பகுதியில் விளையும் சீரக சம்பா அரிசி, பிரியாணிக்குத் தனித்துவ சுவை தருவதால் மிகுந்த தேவை உள்ளது.
ஆனால், உற்பத்தி குறைந்ததால் சந்தையில் டிமாண்ட் அதிகரித்து, விலை ஏற்றமடைந்துள்ளது. கடந்த ஆண்டு அதிகளவில் பயிரிடப்படாததால், இவ்வாண்டு வரத்து குறைந்து, விலை ரூ.200 ஆக உயர்ந்தது.
இதனால், சாதாரண மக்கள் குறைந்த விலையில் கிடைக்கும் துளசி ரக அரிசி (கிலோ ரூ.80) கொண்டு பிரியாணி சமைக்கத் தொடங்கியுள்ளனர்.
வரும் ஜனவரி மாதம் புதிய பயிர் அறுவடை சந்தைக்கு வரும் நிலையில், அப்போது விலை குறைய வாய்ப்புள்ளது. மேலும், நவம்பரில் மேற்கு வங்கத்தில் அறுவடை தொடங்கும் நிலையில், அங்கிருந்து வரத்து அதிகரித்ததும் விலை ஓரளவு குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.