பிஹாரில் ரூ.27 ஆயிரம் கோடியில் 2,400 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் – அதானி பவர் அறிவிப்பு

பிஹாரில் ரூ.27,000 கோடி முதலீட்டில் 2,400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்க உள்ளதாக அதானி பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “பிஹார் மாநில மின் உற்பத்தி கழகத்துடன் 25 ஆண்டுகளுக்கு மின்சாரம் வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் அடிப்படையில், பாகல்பூர் மாவட்டம் பிர்பைன்ட்டியில் ரூ.26,482 கோடி செலவில் அனல் மின் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இங்கு தலா 800 மெகாவாட் திறன் கொண்ட மூன்று யூனிட்டுகள் அமைக்கப்படவுள்ளன. 5 ஆண்டுகளில் உற்பத்தி துவங்கும். பிஹாருக்கு வழங்கப்படும் மின்சார விலை யூனிட்டுக்கு ரூ.6.075 ஆகும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகளில் நேரடி மற்றும் மறைமுகமாக 10,000 முதல் 12,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும். ஆலையின் செயல்பாடு துவங்கியதும் சுமார் 3,000 பேருக்கு நிரந்தர வேலை கிடைக்கும்.

தற்போது நாட்டின் முன்னணி அனல் மின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் அதானி பவர், மொத்தமாக 18,110 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையங்களை நடத்தி வருகிறது.

Facebook Comments Box