லோகேஷ் கனகராஜ் படத்தில் இருந்து ஆமிர் கான் விலகியதற்கான காரணம்?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்குப் பிறகு, லோகேஷ் தானே ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தியும், அடுத்ததாக கார்த்தி நடிப்பில் ‘கைதி 2’ இயக்கத் திட்டமும் வெளிவந்தன.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ், பாலிவுட் நடிகர் ஆமிர் கான் நடிக்கும் சூப்பர் ஹீரோ கதையை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. இதை ஆமிர் கானும், லோகேஷும் உறுதிப்படுத்தியிருந்தனர். இது முதலில் சூர்யாவுக்காக சொல்லப்பட்ட ‘இரும்புக்கை மாயாவி’ கதை எனவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது பாலிவுட் வட்டாரத்தில், இந்த படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காரணம், முழு திரைக்கதையும் முதலில் பூர்த்தி செய்த பிறகே சில மாதங்கள் கழித்து படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என ஆமிர் கான் விருப்பம் தெரிவித்தாராம். ஆனால் லோகேஷ் கனகராஜ் அதற்கு இணங்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால் எந்த சிக்கலும் இல்லாமல், எதிர்காலத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றலாம் என்ற எண்ணத்துடன், இருவரும் சுமுகமாக பிரிந்துள்ளனர். இதன் விளைவாக, அந்த சூப்பர் ஹீரோ படம் தற்போது நடைபெறாமல் போயுள்ளது என கூறப்படுகிறது.