“இமாலய சாதனையும் எளிமையும் ஒருங்கிணைந்தவர் இளையராஜா” – ஏ.ஆர். ரஹ்மான் புகழாரம்

இசைஞானி இளையராஜா தனது இசைப்பயணத்தை 1975-ஆம் ஆண்டு தொடங்கினார். தற்போது 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், தமிழக அரசு அவருக்காக பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தது.

சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் என பலர் பங்கேற்றனர். விழாவில் இளையராஜா சிறப்பாக கலந்துகொண்டு, அவரது சிம்பொனி இசைவும் அரங்கேற்றப்பட்டது.

இதையொட்டி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அவர் கூறியதாவது:

  • “இளையராஜா, இசை உலகில் தமிழுக்கும் தமிழருக்கும் மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே தனித்த பெருமையை தேடித் தந்தவர்.
  • இமாலய சாதனைகளும், எளிமையும் இணைந்த மாமனிதர்.
  • சாஸ்திரிய இசை, மேற்கத்திய செவ்வியல் இசை, மக்கள் இசை ஆகியவற்றின் இடையிலான வேறுபாடுகளை தனது இசையின் வழியாக இணைத்தவர்.
  • குறிப்பாக திரையிசையைத் தாண்டி, மேற்கத்திய செவ்வியல் இசையில் அவர் அமைத்த சிம்பொனி, ஒவ்வொரு இசைக் கலைஞருக்கும் புதுமை செய்யும் ஊக்கமாக திகழ்கிறது.
  • அவரைப் பார்த்து வளர்ந்த கலைஞன் என்பதில் எப்போதும் எனக்கு பெருமை.
  • இந்த பொன்விழாவை தமிழ்நாட்டு அரசு கொண்டாடுவது, இளையராஜாவுக்கான பாராட்டாக மட்டுமல்ல, ஒட்டுமொத்த இசைத்துறைக்கான அங்கீகாரமாகவே கருதப்பட வேண்டும்.
  • எல்லா புகழும் இறைவனுக்கே” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Facebook Comments Box