நார்வேவில் வயர்லெஸ் சார்ஜிங் சாலைகள்!
2026-ஆம் ஆண்டில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் உருவாக்கப்படவுள்ளன… ஆனால், கவலைப்பட வேண்டாம்… ஏனெனில் இப்போதைக்கு இது நார்வே நாட்டில் நடைமுறையில் வர உள்ளது.
உலகளாவியமாக மின்சார வாகன உற்பத்தியும் பயன்பாடும் விரைவாக அதிகரிக்கிறது. இந்தியாவிலும் அண்மைய காலங்களில் மின்சார வாகனங்கள் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், போதுமான சார்ஜிங் நிலையங்கள் இல்லாததால், பல நாடுகளில் மக்கள் மின்சார வாகனங்களை வாங்குவதில் தயக்கம் காட்டுகிறார்கள்.
இந்த சூழலில், நார்வே நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், உலகில் முதன்முறையாக வயர்லெஸ் சார்ஜிங் சாலைகள் அமைக்கப்படுகின்றன.
இந்த வயர்லெஸ் சார்ஜிங் முறையில் மின்காந்த தூண்டல் (Electromagnetic Induction) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சாலையில் காப்பர் கம்பிகள் பதிக்கப்பட்டு, அதனால் உருவாகும் மின்காந்த புலங்கள் வாகனங்களுக்கு நேரடியாக மின் சக்தியை வழங்குகின்றன.
இதன் மூலம், மின்சார வாகனங்கள் சாலையில் இயக்கும் போது சார்ஜ் செய்ய முடியும். முதற்கட்டமாக, நார்வேயின் ட்ரோன்ட்ஹெய்ம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வயர்லெஸ் சார்ஜிங் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன.
நடப்பாண்டின் முடிவுக்கு முன்னர் பணிகள் நிறைவடைந்து, அடுத்தாண்டில் செயல்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Facebook Comments Box