இசையமைப்பாளர் கணேஷ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
பிரபல இசையமைப்பாளர் சங்கர்–கணேஷ் ஜோடியின் கணேஷ், உடல் நலப் பிரச்னையால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பல வெற்றிப் பாடல்களை வழங்கிய இந்த ஜோடியில், சங்கர் ஏற்கனவே மறைந்துவிட்டார். தற்போது, கணேஷுக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால், போரூர் பகுதியிலுள்ள ஒரு மருத்துவமனையில் அவர் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைப் பற்றி அவரது மகனும் நடிகருமான ஸ்ரீகணேஷ் தெரிவித்துள்ளார்:
“அப்பாவுக்கு இதய தொடர்பான பிரச்னை இருந்தது. மருத்துவர்கள் பாடக் கூடாது என்று அறிவுறுத்தியிருந்தும், அப்பா முதல்வர் ஸ்டாலின் விருப்பத்தினால் திமுகவின் முப்பெரும் விழா பாடலுக்கான ஒத்திகைக்குச் ஸ்டூடியோவுக்கு சென்றார். அப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நுரையீரலில் நீர் தேங்கியிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்” என்றார்.