“ஜியோஸ்டாருக்கே ஒளிபரப்பு உரிமை” – ‘ஜாலி எல்எல்பி 3’ படத்துக்கு சட்டவிரோத ஸ்ட்ரீமிங்கில் தடை

அக்‌ஷய் குமார், அர்ஷத் வார்ஸி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜாலி எல்எல்பி 3’ திரைப்படம் நாளை (செப்டம்பர் 19) திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில், இப்படத்தை இணையத்தில் சட்டவிரோதமாக ஒளிபரப்புவதைத் தடுக்க ஜியோஸ்டார் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி,

  • இப்படத்தை ஸ்ட்ரீம் செய்யும் தனி உரிமை ஜியோஸ்டாருக்கே சொந்தமானது என்றும்,
  • சட்டவிரோத தளங்கள் வழியாக வெளியிட்டால் ஜியோஸ்டாருக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, 20-க்கும் மேற்பட்ட சட்டவிரோத தளங்களை 72 மணி நேரத்திற்குள் முடக்கவும், அவற்றின் உரிமையாளர்கள் குறித்த விவரங்களை இரண்டு வாரங்களில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் டெல்லி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

சுபாஷ் கபூர் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் அக்‌ஷய் குமார், அர்ஷத் வார்ஸி, ஹூமா குரேஷி, அமிர்தா ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதை ஸ்டார் ஸ்டுடியோ 18 மற்றும் கங்க்ரா டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளன.

Facebook Comments Box