போக்சோ வழக்கில் யோகா குரு நிரஞ்சனா மூர்த்தி கைது
பெங்களூருவில் ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் வசித்து வரும் பிரபல யோகா குரு நிரஞ்சனா மூர்த்தி (55), கர்நாடக யோகா வளர்ச்சி ஆணையத்தின் செயலாளராக பணியாற்றுகிறார். அவர் “சன் ஷைன் யோகா” என்ற பெயரில் நகரின் பல இடங்களில் யோகா பயிற்சிகள் நடத்தி வந்தார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி, 19 வயது இளம்பெண் ராஜராஜேஸ்வரி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில்,
“2023ஆம் ஆண்டு, யோகா குரு நிரஞ்சனா மூர்த்தியிடம் பயிற்சி பெற்ற போது, தாய்லாந்து பயணம் சென்றிருந்தோம். அப்போது நான் 17 வயதாக இருந்தேன். அந்த நேரத்தில் அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்” என்று குற்றம்சாட்டினார்.
இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் போக்சோ உட்பட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, நிரஞ்சனா மூர்த்தியை கைது செய்துள்ளனர்.
Facebook Comments Box