‘ஜனநாயகன்’ எப்படி இருக்கும்? – இயக்குநர் ஹெச்.வினோத் விளக்கம்
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாமல், சில போஸ்டர்கள் மற்றும் குறும்பட டீசர் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. இதனால் படம் குறித்த பல்வேறு வதந்திகள் இணையத்தில் பரவி வருகின்றன.
இந்நிலையில், இப்படம் குறித்து முதல் முறையாக இயக்குநர் ஹெச்.வினோத் பேசினார். அவர் கூறியதாவது:
“ஜனநாயகன் விஜய் அவர்களின் பக்கா கடைசிப் படம் ஆகும். இதில் மாஸ், ஆக்ஷன், கமர்ஷியல் அனைத்தும் கலந்திருக்கும். ரசிகர்கள் முழுமையாக கொண்டாடும் படமாக இருக்கும்” என்றார்.
இந்த தகவல் விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கே.வி.என் தயாரிப்பில் உருவாகும் ‘ஜனநாயகன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.