ஒரே நாளில் ரூ.299 கோடி உயர்ந்த அதானியின் சொத்து மதிப்பு!
அதானி குழுமத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை சந்தையில் முன்னேற்றம் கண்டது. இதன் மூலம், குழுமத்தின் தலைவரான கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.299 கோடி உயர்ந்துள்ளது.
கொழும்பு, விமான நிலையம், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற பல துறைகளில் கவுதம் அதானி ஈடுபட்டுள்ளார். 63 வயதான அவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 87.4 பில்லியன் டாலர்கள் ஆகும்.
இந்த நிலையில், அதானி குழுமத்தில் எந்தவொரு மோசடியும் அல்லது நியாயமற்ற வர்த்தக நடைமுறையும் இல்லை என்றும், அதானி குழுமத்திற்கு எதிராக இருந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) நிராகரித்துள்ளது.
2023-ல் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியது. அதன் பின்னர், அதானி பங்குகள் மற்றும் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு சரிந்தது. ஆனால், SEBI அதனை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என நிராகரித்ததால், அதானி குழும பங்குகளின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.