இமாச்சலில் கனமழை: இதுவரை 427 பேர் உயிரிழப்பு
இமாச்சலில் இந்த ஆண்டு ஜூன் 20 முதல் செப்டம்பர் 20 வரையிலான பருவ மழை பாதிப்புக்கு 427 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 243 பேர் நிலச்சரிவு, வெள்ளம், மின்னல் தாக்குதல் போன்ற கனமழை தொடர்பான சம்பவங்களில் இறந்துள்ளனர். 184 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் உள்கட்டமைப்புகள் பெருமளவில் சேதம் அடைந்துள்ளன. இன்றைய நிலவரப்படி 2 தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட 394 சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. 73 மின்மாற்றிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 174 குடிநீர் திட்டங்கள் செயல்படவில்லை. 3 மாத பேரிடர்களில் 1,708 காயம் அடைந்துள்ளனர். 481 விலங்குகள் இறந்துள்ளன. வாழ்வாதாரங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
Facebook Comments Box