ரயில் நிலையங்களில் விற்கப்படும் ‘ரயில் நீர்’ விலை குறைப்பு
ரயில் நிலையங்களில் விற்கப்படும் தண்ணீர் பாட்டில் விலையை குறைத்து, ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரும்.
ரயில் பயணத்தின் போது பயணிகளின் வசதிக்காக, ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் “ரயில் நீர்” என்ற தண்ணீர் பாட்டில் விற்கப்படுகிறது. ரயில் நீர் பாட்டில், இந்திய ரயில்வே வழங்கும் பிராண்டட் குடிநீர் பாட்டிலாகும். இது ரயில்வே வளாகங்களில் பயணிகளுக்கு வசதியாக விற்கப்படுகிறது. முன்பு, ஒரு லிட்டர் பாட்டில் ரூ.15-க்கு, அரை லிட்டர் பாட்டில் ரூ.10-க்கு விற்கப்பட்டுவந்தது.
இதன்படி, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் விற்கப்படும் “ரயில் நீர்” பாட்டில் விலை ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது. ரயில் நீர்:
- ஒரு லிட்டர் பாட்டில்: ரூ.15 → ரூ.14
- அரை லிட்டர் பாட்டில்: ரூ.10 → ரூ.9
மேலும், இதர தண்ணீர் பாட்டில்களின் விலையும் ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை நாளை (22-ம் தேதி) முதல் நடைமுறைக்கு வரும் என்று ரயில்வே வாரியம் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.