கொரியா ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் சாம்பியன்

கொரியா ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

சியோல் நகரில் நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில், இகா ஸ்வியாடெக்கும் ரஷ்யாவின் இகாடெரினா அலெக்சாண்ட்ரோவாவும் மோதினர். இதில் ஸ்வியாடெக் 1-6, 7-6 (7/3), 7-5 என்ற செட் கணக்கில் இகாடெரினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

Facebook Comments Box