டவர் இல்லை? சிக்கல் இல்லை! : வந்துவிட்டது பிஎஸ்என்எல் SATELLITE போன்!
இதுவரை ராணுவம் மட்டுமே பயன்படுத்தி வந்த சாட்டிலைட் போன்கள், பொதுமக்களின் கைகளிலும் செல்லத் தொடங்கியுள்ளது… டவர் இல்லாத இடங்களில் இன்றைய பயனாளர்கள் எங்கிருந்தாலும் இனி எளிதாக, தடையின்றி பேசலாம்… அப்படியான ஒரு சேட்டிலைட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது பிஎஸ்என்எல்… அது என்ன? விரிவாகப் பார்க்கலாம்…
இந்தியாவில் தகவல் தொடர்பு துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள BSNL IsatPhone 2 SATELLITE போன்கள், தொலைதூர மற்றும் அணுக முடியாத பகுதிகளில் நம்பகமான தகவல் பரிமாற்றத்தை வழங்குகின்றன. கடுமையான செங்குத்தான மலைப்பகுதிகள், வெப்பமான பாலைவனங்கள், ஆகாசத்தை எல்லையாகக் கொண்ட பெருங்கடல்கள் போன்ற அணுக முடியாத இடங்களில் துல்லியமான தகவல் தொடர்பை வழங்க, BSNL IsatPhone 2 SATELLITE போன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
BSNL நிறுவனம் தனிப்பட்ட முறையில் அறிமுகப்படுத்திய IsatPhone 2 போன்கள் செயற்கைக்கோள் உதவியுடன் தகவல் தொடர்பை வழங்குகின்றன. ₹90,000 விலை கொண்ட இந்த போன்கள் ராணுவம், எல்லை பாதுகாப்பு படைகள், பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் போன்ற சவாலான சூழ்நிலைகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
IsatPhone 2 போன்கள் மூலம், நெட்வொர்க் கவர்ேஜ் இல்லாத இடங்களிலும் அழைப்புகளையும் அவசர தகவல்களையும் அனுப்ப முடியும்… இணைய சேவைகள், UPI பரிவர்த்தனைகளை செய்ய முடியும். நீடித்த உழைப்பு, நீண்ட ஆயுள் கொண்ட பேட்டரி, நீர்ப்புகா தன்மை மற்றும் கீழே விழுந்தாலும் உடையாத அம்சங்கள் IsatPhone 2 கொண்டுள்ளது.
தொலைதூர பகுதிகளில் அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டியவர்களுக்கு, BSNL SATELLITE ஃபோன்கள் குறைந்த செலவில் நம்பகமான தகவல் தொடர்பு தீர்வுகளை வழங்குகின்றன. நியாயமான விலை மற்றும் நிலையான நெட்வொர்க் கவர்ேஜ் மூலம் பயனர்கள் தகவல் தொடர்பு செலவுகளை குறைக்க முடியும்.
தனியார் பயனர்களுக்கான மாதாந்திர ரீசார்ஜ் ₹5,600 மற்றும் ஆண்டு ரீசார்ஜ் ₹61,600 ஆகும். அரசு பயனர்களுக்கு மாதாந்திர ரீசார்ஜ் ₹3,360 மற்றும் ஆண்டு ரீசார்ஜ் ₹36,960 ஆகும். வரம்பை மீறிய ஒவ்வொரு அழைப்பிற்கும் நிமிடத்திற்கு ₹18, SMS ஒன்றிற்கு ₹18 கட்டணம் வசூலிக்கப்படும்.
தொடக்கத்தில் அரசு பயனாளர்களுக்கே அனுமதிக்கப்பட்ட IsatPhone 2 போன்களை இனி பொதுமக்களும் வாங்கி பயன்படுத்த முடியும். பிஎஸ்என்எல் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் IsatPhone 2 போன்களை வாங்கலாம்.
இயற்கை பேரழிவுகள், விபத்துக்கள், பயங்கரவாத தாக்குதல்கள் போன்ற அவசர சூழ்நிலைகளில் IsatPhone 2 SATELLITE மூலம் மக்கள் அதிகாரிகளை விரைவில் எச்சரிக்கவும், தேவையான உதவியை பெறவும் முடியும். மொபைல் நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் நம்பகமான தகவல் தொடர்பை உறுதி செய்யும் IsatPhone 2, அவசர நிலை மற்றும் டிஜிட்டல் தகவல் தொடர்பில் புதிய அனுபவத்தை வழங்கும் என்பது நிபுணர்களின் கருத்து.