படப்பிடிப்பில் ஜீப் கவிழ்ந்த விபத்து: ஜோஜு ஜார்ஜ் காயம்
மலையாளத்தின் முன்னணி நடிகர் ஜோஜு ஜார்ஜ், தமிழில் ‘ஜகமே தந்திரம்’, ‘பபூன்’, ‘தக் லைஃப்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இவர் தற்போது நடித்து வரும் மலையாளப் படம் ‘வரவு’.
ஷாஜி கைலாஷ் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மூணாறு அருகே நடந்துகொண்டிருந்தது. அதில் ஜீப்பை ஓட்டி வரும் காட்சியை படமாக்கியபோது, எதிர்பாராதவிதமாக ஜீப் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஜோஜு ஜார்ஜ், நடிகர் தீபக் பரம்போல் மற்றும் ஒரு ஸ்டன்ட் கலைஞர் லேசாகக் காயமடைந்தனர். உடனடியாக மூவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அனைவரும் ஆபத்திலிருந்து மீண்ட நிலையில், சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Facebook Comments Box