‘இனி போட்டியாளரே அல்ல’ – பாகிஸ்தான் குறித்து சூர்யகுமார் யாதவ் கூற்று

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானை இரு முறை வீழ்த்திய பிறகு, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “இனி பாகிஸ்தான் அணியை போட்டியாளர்கள் என்று கூட கருத முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் மோதல் என்றாலே எப்போதும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவும். ஆனால், கடந்த 2013 முதல் இரு அணிகளும் நேரடி இருதரப்பு தொடர்களில் சந்தித்து விளையாடவில்லை. தற்போது, ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில்தான் இரு அணிகளும் மோதுகின்றன.

சூர்யகுமார் கூறியதாவது:

“ஒரு போட்டி உண்மையான ‘ரைவல்’ (Rivalry) ஆக இருக்க, குறைந்தது 15 முதல் 20 ஆட்டங்களில், இரு அணிகளும் சமமான நிலையை வைத்திருக்க வேண்டும். 7–7, 8–7 என்ற அளவில் இருந்தால் தான் அது போட்டியாளர்கள். ஆனால், 13–0 அல்லது 10–1 போன்ற புள்ளிகள் இருந்தால், அதற்கு ‘ரைவல்’ என்று சொல்ல முடியாது. பாகிஸ்தான் குறித்து இப்போது அப்படியே தான் நிலை உள்ளது. இனி அவர்களை போட்டியாளர்களாகக் கூட கருத வேண்டாம்” என்றார்.

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் நடந்த இரு ஆட்டங்களிலும் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box