காலிஸ்தான் தீவிரவாதி இந்திரஜித் சிங் கனடாவில் போலீசாரால் கைது

அமெரிக்காவில் “சீக்கியர்களுக்கான நீதி” (SFJ) என்ற பெயரில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் கனடா பொறுப்பாளராக இருந்தவர் இந்திரஜித் சிங் கோசல் (36). குர்பத்வந்த் சிங் பன்னுனின் வலதுகரம் எனக் கருதப்படும் இவர், தற்போது கனடா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பரில், கனடாவில் உள்ள இந்து கோவிலில் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box