ஐ.நா. பொதுச்சபையில் நெதன்யாகு உரையாற்றியதும் வெளியேறிய பிரதிநிதிகள்!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80வது அமர்வில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்ற மேடைக்கு வந்தவுடன் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட பல பிரதிநிதிகள் எதிர்ப்புத் தெரிவித்து அவையை விட்டு வெளியேறினர்.

தனது உரையில் நெதன்யாகு, “பாலஸ்தீனுக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்கக்கூடாது. அது இஸ்ரேலியர்களுக்கு தற்கொலை செய்வதற்குச் சமமானது. பாலஸ்தீனுக்கு ஆதரவாக நிற்கும் நாடுகள் வெட்கப்பட வேண்டும். குறைந்த ஆதரவுடனேயே இஸ்ரேல் ஏழுக்கும் மேற்பட்ட மோதல்களை சமாளித்து வருகிறது” என்று தெரிவித்தார்.

அவரது பேச்சின் போது பெரும்பாலான இருக்கைகள் காலியாகி காணப்பட்டன. இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. மேலும், நெதன்யாகுவின் உரை காஸா எல்லை பகுதியில் ஒலிப்பெருக்கிகள் மூலம் நேரடியாக ஒலிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box