சூப்பர் ஓவரில் இலங்கையை தோற்கடித்தது இந்தியா | ஆசிய கோப்பை

நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் இந்திய அணி சூப்பர் ஓவரில் இலங்கை அணியை வெற்றிபெற்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் ஆசிய கோப்பை தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன. அதே நேரத்தில் இன்று திட்டமிட்டபடி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான சூப்பர் 4 சுற்று ஆட்டம் துபாயில் நடைபெற்றது.

இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மன் கில் பேட்டிங்கை தொடங்கினர். ஷுப்மன் கில் 4 ரன்களில் அவுட் ஆனார், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்களில் வெளியேறினார்.

மறுமுனையில் அபிஷேக் சர்மா 31 பந்துகளில் 61 ரன்கள் அடித்து அதிரடி தாக்கம் காட்டினார். தொடர்ந்து திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இணைந்து 66 ரன்கள் எடுத்தனர். சஞ்சு சாம்சன் 29 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்டியா 2 ரன்களில் அவுட் ஆனார்.

20 ஓவர்களில் இந்தியா 5 விக்கெட் இழப்பில் 202 ரன்கள் செய்தது. இலங்கை அணி 203 ரன்கள் இலக்காக வைத்து ஆட்டத்தை தொடங்கியது. ஓப்பனிங் பேட்ஸ்மேன் பதும் நிசங்கா 58 பந்துகளில் 108 ரன்கள் செய்து அசத்தினார். குசால் மெண்டிஸ் டக் அவுட் ஆனார். குசால் பெரேரா 58 ரன்கள் சேர்த்துப் பார்ட்னர்ஷிப் அமைத்தார், ஆனால் 12-ஆம் ஓவரில் அவுட் ஆனார்.

முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பில் 202 ரன்களில் ஆட்டத்தை டிராவில் முடித்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் நடைமுறைப்படி இரண்டு அணிகளுக்கும் ஒரு ஓவர் வழங்கப்பட்டது. முதலில் ஆடிய இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே 3 ரன்கள் எடுத்தார். இதனால் இந்தியா வெற்றி பெற்றது.

Facebook Comments Box