நடிகர் சூர்யாவின் மகள் தியா இயக்குநராக அறிமுகம்!

நடிகர் சூர்யாவின் மகள் தியா, ‘லீடிங் லைட்’ என்ற ஆவணக் குறும்படத்தின் மூலம் இயக்குநராக தன் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

சூர்யா, ஜோதிகா தம்பதியின் மகள் தியா. குழந்தைகளின் கல்விக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு சூர்யா-ஜோதிகா மும்பையில் குடியேறினர். படப்பிடிப்பு காலங்களில் மட்டும் சென்னை வரவும் செல்வதும் நடந்தது. அந்த சூழலில் தியா தற்போது ஒரு ஆவணக் குறும்படத்தை இயக்கியுள்ளார்.

2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஆவணக் குறும்படம், பாலிவுட் லைட்வுமன்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ‘லீடிங் லைட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

திரைக்கு பின்னணியில் பணிபுரியும் லைட்வுமன்களின் அனுபவங்களையும், அவர்களின் கதைகளையும் விவரிக்கும் டாக்குமென்டரி-டிராமா வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் ஆஸ்கர் போட்டிக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செப் 26 முதல் அக்டோபர் 2 வரை திரையிடப்படுகிறது.

Facebook Comments Box