அமெரிக்க அதிபரை சந்திக்க 30 நிமிடம் காத்திருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி அசிம் முனிர் நேற்று முன்தினம் அமெரிக்கா வந்தனர். இருவரும் தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு மாலை 4.52 மணிக்கு அடைந்தனர். அப்போது அதிபர் ட்ரம்ப் பல்வேறு அலுவல்களில் ஈடுபட்டிருந்தார்.

அவரை சந்திக்க, ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அசிம் முனிர் சுமார் 30 நிமிடம் காத்திருந்தனர். அதிபர் ட்ரம்ப் நிகழ்ச்சிகளை முடித்தபின், பிரதமர் ஷெபாஸ் மற்றும் ராணுவ தளபதி அசிம், ஓவல் அலுவலகத்தில் ட்ரம்பை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

சந்திப்பு முடிந்தபின் மாலை 6.18 மணிக்கு ஷெபாஸ் மற்றும் அசிம் காரில் புறப்பட்டனர்.

இதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், “பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி அசிம் முனிர் சிறந்த தலைவர்கள்” என்று கூறினார்.

Facebook Comments Box