டோவினோ தாமஸ் நடிப்பில் ‘லோகா: சாப்டர் 2’ உருவாகிறது என்று தயாரிப்பு குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டாமினிக் அருண் இயக்கத்தில், கல்யாணி பிரியதர்ஷன் நடித்த ‘லோகா: சாப்டர் 1’ படத்தை துல்கர் சல்மான் தயாரித்து வெளியிட்டார். அந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனையை எட்டியது. கேரளாவில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையும் பெற்றது. இதில் டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் உள்ளிட்டோர் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, தொடர்ச்சிப் பகுதிகள் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது, அதன் இரண்டாம் பாகத்தை துல்கர் சல்மான் அறிவித்து, டோவினோ தாமஸ் ஹீரோவாக நடிப்பார் எனவும் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். ‘லோகா: சாப்டர் 1’ படத்தில் பணியாற்றிய அதே தொழில்நுட்பக் குழுவே இந்தப் படத்திலும் பணிபுரிய உள்ளது.
மிக விரைவில் படப்பிடிப்பு துவங்கி, அடுத்த ஆண்டுக்குள் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. முதல் பாகத்தை விட அதிக பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க துல்கர் சல்மான் முடிவு செய்துள்ளார்.