தென் அமெரிக்க நாடுகள் பயணம் – ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, 4 தென் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்தார். ராகுல் காந்தியுடன் பவன் கேராவும் பயணத்தில் சேர்ந்துள்ளார்.

இந்த பயணத்தின் போது ராகுல் காந்தி அரசியல் தலைவர்களை, பல்கலைக்கழக மாணவர்களை மற்றும் தொழில்துறை தலைவர்களை சந்தித்து உரையாட திட்டமிட்டுள்ளார் என்று பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பயணிக்கும் 4 நாடுகளின் முழுப் பட்டியல் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் இதில் அடங்கும் என்று தெரிகிறது. ராகுல் காந்தி எத்தனை நாட்கள் பயணிப்பார் என்பதற்கான தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்த சந்திப்பின் நோக்கம், தென் அமெரிக்க நாடுகளின் அதிபர்கள் மற்றும் மூத்த அரசியல் தலைவர்களுடன் உரையாடி ஜனநாயக மற்றும் இருநாட்டு நல்லுறவை பலப்படுத்துவது எனவும், அமெரிக்க வரி விதிப்பை கருத்தில் கொண்டு இந்தியாவுடன் தொழில் உறவுகளை மேம்படுத்தி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சியை எடுத்துரைப்பது எனவும் பவன் கேரா தெரிவித்தார்.

Facebook Comments Box