பித்ரு தோஷம் நீக்கும் சுரைக்காயூர் வரதராஜர் | ஞாயிறு தரிசனம்

சூரிய நாராயண பெருமாள்

தாயார்: லட்சுமி நாராயணி

தல வரலாறு:

இலங்கைக்கு பாலம் அமைக்கும் போது, சுரைக்காயூரில் உள்ள புஜபதீஸ்வரர் ஆலயத்தின் தலவிருட்சமாகிய பாலக்காட்டு மூலிகைகொடி தேவைப்படுவதாக ஸ்ரீ ராமர் ஆஞ்சநேயரிடம் கூறினார். அதன்படி ஆஞ்சநேயர் சுரைக்காயூருக்கு வந்து பாலக்காட்டு மூலிகைகளை பறிக்க முயன்றபோது, அவை கூறின:

“தட்சன், சிவபெருமானை மரியாதை செய்யாமல் யாகம் செய்தார். அந்த யாகத்தில் கலந்த அக்னி அருளிய சூரிய பகவானுக்கு பல்வேறு சாபங்கள் ஏற்பட்டன. அதன் விளைவாக, சூரியலோகத்தைச் சார்ந்த எங்களுக்கு பொலிவிழந்து போகும் சூழல் ஏற்பட்டது. எங்களது நிலை மாற, தாங்கள் ஏதாவது செய்ய வேண்டும்.”

இந்த நிகழ்வை ஆஞ்சநேயர் ஸ்ரீ ராமச்சந்திர பிரபுவிடம் எடுத்துரைத்தார். அதற்கு, வனவாசம் முடிந்ததும் ஸ்ரீ ராமர் இவ்விடத்திற்கு வந்து தன் குலதெய்வமான சூரிய நாராயண பெருமாளை முதன்முறையாக பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இதனால் சூரியலோக மூலிகைகள் அனைத்தும் புதுப் பொலிவுடன் விளங்கத் தொடங்கின.

கோயில் சிறப்புகள்:

இது உலகின் ஒரே சூரிய மேடு தலம். இங்கு அகத்திய முனிவர் வழிபட்டதாக குறிப்பிடப்படுகிறது. இந்தத் தலத்தில் உள்ள சூரிய மேட்டில் இரு கைகளையும் வைத்து சூரிய பகவானை வணங்கினால், நம் கைகளில் உள்ள சூரிய நாடி மற்றும் நரம்புகள் வழியாக சூரிய சக்திகள் கிடைக்கும். அதன் பலனாக, பித்ரு தோஷம் மற்றும் பித்ரு சாபம் நீங்கி விடும்.

மேலும், கல்வியில் முன்னேற, கண் குறைபாடுகள் நீங்க, நீண்டகால நோய்கள் விலக, குலதெய்வம் பற்றிய தெளிவு பெற, இங்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

அமைவிடம்:

தஞ்சாவூரிலிருந்து திருக்கருகாவூர் செல்லும் சாலையில் உள்ள மெலட்டூரில் இருந்து அய்யம்பேட்டை நோக்கிச் செல்லும் வழியில் சுரைக்காயூர் தலத்தை அடையலாம்.

கோயில் திறப்பு நேரம்:

காலை 6.00 – 12.00 மணி

மாலை 4.00 – 8.00 மணி

Facebook Comments Box