சோனம் வாங்சுக் கைது காரணம் – லடாக் டிஜிபி விளக்கம்

லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வேண்டும் என சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் முன்னிலையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டம் வன்முறையாக மாறியது. இதுகுறித்து லடாக் டிஜிபி சிங் ஜாம்வல் அளித்த பேட்டியில் தெரிவித்தது:

உண்ணாவிரதம் வன்முறையாக மாற சோனம் வாங்சுக் முக்கிய காரணமாக இருந்தார். இந்த போராட்டத்துக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடைபெறுகிறது.

வாங்சுக் முன்னதாகவே பாகிஸ்தான் சென்றவர்; அங்கு இஸ்லாமாபாத் அதிகாரிகளுடன் பேசியதும் உண்மை. லே பகுதியில் போராட்டம் அதிகரிக்காமல் தடுப்பதற்காகவே சோனம் வாங்சுக்கை கைது செய்தோம். இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.

Facebook Comments Box