“கரூர் துயரச் செய்தி… நெஞ்சை நெருடுகிறது, கண்ணீர் மல்குகிறது!” — திரையுலகின் இரங்கல் பகிர்வு
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் இரங்கலுக்கு இணையாக, திரையுலகப் பிரபலங்களும் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்:
- பிரபுதேவா: கரூரில் நிகழ்ந்த உயிரிழப்பு மிகுந்த துயரம் தருகிறது. குடும்பங்களுக்கு என் பிரார்த்தனைகள் மற்றும் ஆழ்ந்த இரங்கல்கள்.
- கங்கனா ரனாவத்: கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிர் இழப்பு வேதனையளிக்கிறது. குடும்பங்களுக்கு இரங்கல்கள்; காயமடைந்தோர் விரைவில் குணமடையட்டும்.
- கார்த்தி: இந்தச் செய்தி தாங்க முடியாத துயரத்தை தருகிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு இரங்கல்கள். இனி இத்தகைய விபத்துகள் நடைபெறாமல் இருக்க ஒன்றிணைய வேண்டும்.
- விஷ்ணு விஷால்: கரூர் விபத்து பற்றி அறிந்து பேச வார்த்தைகள் இல்லை. அனைவருடனும் என் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன.
- ராகவா லாரன்ஸ்: ஏற்பட்ட உயிரிழப்பால் பெரும் வருத்தம். காயமடைந்தோர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
- பா. ரஞ்சித்: கரூர் பெருந்துயரம் மனதை உலுக்குகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
- கார்த்திக் சுப்பராஜ்: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடையட்டும்.
- மாரி செல்வராஜ்: கரூர் பேரிழப்பு நெஞ்சை அடைக்கிறது… இந்த இரவை எப்படி கடப்பது எனவே தெரியவில்லை. கண்ணீர் மட்டுமே வருகிறது.
- ஹரிஷ் கல்யாண்: மனதை பதற வைக்கும் செய்தி. குடும்பங்களுக்கு இரங்கல், காயமடைந்தோர் விரைவில் நலம்பெறட்டும்.
- சிபிராஜ்: அப்பாவி உயிர்கள் இழந்ததால் மனம் உடைந்தது. குடும்பங்களுக்கு இரங்கல்கள், காயமடைந்தோர் விரைவாக குணமடையட்டும்.
கரூர் துயரச் சம்பவம் குறித்து திரைத் துறையினரின் மனவலி தமிழக மக்களின் துயரத்துடன் ஒன்றிணைந்துள்ளது.
Facebook Comments Box