பான்ஹெம் வென்ச்சர்ஸ் — ஸ்டார்ட்-அப் சிங்கம் 2-வது சீசனில் இணைந்த தொழிலதிபர்கள்

தமிழ்நாட்டில் தொழில்முனைவோர்களுக்கான தனித்துவமான ரியாலிட்டி ஷோவாக பான்ஹெம் வென்ச்சர்ஸ் நிறுவனம் நடத்திய ஸ்டார்ட்-அப் சிங்கம் முதல் சீசன் பெரும் வரவேற்பைப் பெற்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி, புதிய தொழில் முயற்சிகளை அறிமுகப்படுத்தவும், நிதி திரட்டவும் ஒரு முக்கிய தளமாக இருந்தது.

பாலசந்தர் மற்றும் ஹேமச்சந்திரன் இணைந்து நடத்தும் பான்ஹெம் வென்ச்சர்ஸ், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், வழிகாட்டுவோரை ஒரே மேடையில் இணைக்கும் பணி செய்கிறது. இதன் தலைமை ஆலோசகராக குமார் வேம்பு செயல்படுகிறார். முதல் சீசனில் 35 ஸ்டார்ட்-அப்களுக்கு ரூ.40 கோடி அளவுக்கு முதலீட்டு உறுதிமொழி கிடைத்தது. அதில் ரூ.13 கோடி நேரடியாக வழங்கப்பட்டன. இதனால், தமிழ்நாட்டின் ஸ்டார்ட்-அப் சூழலில் ஸ்டார்ட்-அப் சிங்கம் ஒரு “கேம் சேஞ்சர்” ஆக மாறியுள்ளது.

இந்நிலையில், ஸ்டார்ட்-அப் சிங்கம் 2 தொடர் நிதி திரட்டல் நிகழ்வில் புதிய தொழிலதிபர்கள் ஆலோசகராகவும் முதலீட்டாளராகவும் இணைந்துள்ளனர். நாடு முழுவதும் வந்த 2,000 விண்ணப்பங்களில் இருந்து 75 ஸ்டார்ட்-அப்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மொத்தம் ரூ.100 கோடி முதலீட்டு உறுதிமொழி கிடைத்துள்ளதாக நிறுவனர் பாலசந்தர் தெரிவித்தார்.

இரண்டாவது சீசனில் இணைந்த முக்கிய தொழிலதிபர்கள்:

  • கோபால் நிவாசன் – தலைவர், டிவிஎஸ் கேப்பிட்டல் பண்ட்ஸ்
  • கிரீஷ் மாத்ருபூதம் – நிறுவனர், பிரெஷ்வொர்க்ஸ்
  • மிதுன் சச்சேதி – நிறுவனர், காரட்லேன்
  • கே. மகாலிங்கம் – இயக்குநர், டிஎஸ்எம் குழும நிறுவனங்கள்
  • மோகன் கருப்பையா – சிஇஓ, இப்போபே
  • ஷ்யாம் சேகர் – நிறுவனர், IThought Financial Consulting
  • அஷ்வினி அசோகன் – நிறுவனர், Mad Street Den
  • மதுசூதனன் ரங்கராஜன் – M2P Fintech

ஸ்டார்ட்-அப் சிங்கம் இரண்டாவது சீசன் 2025 ஜனவரியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என ஹேமச்சந்திரன் அறிவித்தார்.

Facebook Comments Box