சாம்பார் வெங்காயம் விலை சரிவு – கிலோ ரூ.20க்கு விற்பனை

கோயம்பேடு சந்தையில் சாம்பார் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.20 ஆகக் குறைந்துள்ளது. பொதுவாக சாகுபடி பரப்பு குறைவாக இருப்பதால் எப்போதும் உயர்ந்த விலையிலேயே விற்கப்படும் இந்த வெங்காயம், சராசரியாக கிலோ ரூ.50க்கும், சில நேரங்களில் ரூ.120க்கும் விற்கப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது கோயம்பேடு மொத்த சந்தையில் வெறும் ரூ.20க்கே கிடைக்கிறது.

அதேபோல், பிற காய்கறிகளின் விலை:

  • கேரட், முருங்கைக்காய், அவரைக்காய் – கிலோ ரூ.40
  • பீன்ஸ் – ரூ.25
  • பாகற்காய், கத்தரிக்காய், சாம்பார் வெங்காயம், உருளைக்கிழங்கு – தலா ரூ.20
  • தக்காளி – ரூ.18
  • முள்ளங்கி, நூல்கோல், பெரிய வெங்காயம், புடலங்காய் – தலா ரூ.15
  • பீட்ரூட், வெண்டைக்காய் – தலா ரூ.10
  • முட்டைக்கோஸ் – ரூ.5

“கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரித்ததால் சாம்பார் வெங்காயம் விலை குறைந்துள்ளது,” என்று மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

Facebook Comments Box